சிறிலங்காவில் தமது திட்டங்களுக்கு பாதுகாப்பு வழங்குமாறு சீனா, இந்தியா கோரிக்கை

சிறிலங்காவில் தமது திட்டங்கள் மற்றும் நிலைகளுக்கான பாதுகாப்பை வழங்குமாறு சீன, இந்திய அரசாங்கங்கள், சிறிலங்கா அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளன.

அம்பாந்தோட்டை துறைமுகம், கொழும்பு துறைமுக நகரம், ஈஸ்டர் ஞாயிறன்று குண்டுத் தாக்குதலுக்கு இலக்காகிய ஷங்ரி-லா விடுதி ஆகியவற்றின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு சீன அரசாங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

அதேபோன்று சிறிலங்காவில் தாம் முன்னெடுக்கின்ற திட்டங்களுக்கும் பாதுகாப்பு வழங்குமாறு இந்திய அரசாங்கமும் சிறிலங்காவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

அதேவேளை, கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகமும், உள்நாட்டு பாதுகாப்புத் துறையில் நிபுணத்துவம் வாய்ந்த இரண்டு மூத்த அதிகாரிகளைப் பணியில் அமர்த்தவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுதொடர்பான நாளிதழ்களில் விளம்பரத்தை பிரசுரித்து, ஆட்சேர்ப்புச் செய்வதற்கும் முடிவு செய்யப்பட்டுள்ளது.