சிறிதரன் எம்.பி. பதவிமுத்திரை விவகாரம் – குற்றத் தடுப்பு பிரிவு விசாரணை

நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் சிவ­ஞா­னம் சிறி­த­ர­னின் நாடா­ளு­மன்­றப் பதவி முத்­திரை மற்­றும் நாடா­ளு­மன்­றக் கடி­தத் தலைப்பு போன்­ற­வற்றை மோச­டி­யான முறை­யில் பயன்­ப­டுத்­தி­னார் எனக் கூறப்­ப­டும் விவ­கா­ரம் தொடர்­பில் கிளி­நொச்சி பொலிஸ் நில­யத்­தில் செய்­யப்­பட்ட முறைப்­பாட்­டை­ ய­டுத்து அந்த விசா­ர­ணை­கள் குற்­றத்­த­டுப்­புப் பிரி­வி­ன­ரி­டம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டுள்­ளன எனக் கிளி­நொச்­சிப் பொலிஸ் நிலை­யத் தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன.

தனது பத­வி­முத்­திரை மற்­றும் நாடா­ளு­மன்­றக் கடி­தத் தலைப்பு போன்­றவை கள­வா­டப்­பட்டுத் தவ­றா­ன­மு­றை­யில் பயன்­ப­டுத்­தப்பட்­டுள்­ளன எனத் தெரி­வித்து நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் சி.சிறி­த­ரன் கடந்த ஜூன் மாதம் கிளி­நொச்­சிப் பொலிஸ் நிலை­யத்­தில் முறைப்­பாடு பதிவு செய்­தி­ருந்­தார்.

அந்த முறைப்­பாட்டை அடுத்து பொலி­ஸார் அது தொடர்­பில் விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்­தி­ருந்­த­னர். இந்த நிலை­யி­லேயே விசா­ர­ணை­கள் குற்­றத்­த­டுப்­புப் பிரி­வி­ன­ரி­டம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டுள்­ளன எனத் தெரி­விக்­கப்­பட்­டது.

அவர்­கள் விசா­ர­ணை­க­ளைத் தொடர்ந்து முன்­னெ­டுத்து வரு­கின்­ற­னர் என­வும், இந்த விட­யம் தொடர்­பாகக் கிளி­நொச்சி நீதி­வான்­மன்­றி­லும் அறிக்கை சமர்ப்­பித்­துள்­ள­தா­க­வும் பொலிஸ் தரப்­புத் தக­வல்­கள் தெரி­வித்­தன.

LEAVE A REPLY