சிரியாவில் 20 நாள் தாக்குதலில் 219 குழந்தைகள் உள்பட 1,031 பேர் பலி

தாக்குதலில் பலியான அப்பாவி மக்களின் எண்ணிக்கை ஆயிரத்து 31 ஆகி உள்ளது. அவர்களில் 219 பேர் குழந்தைகள் என்பது நெஞ்சை நொறுக்குவதாக அமைந்துள்ளது. இது மட்டுமின்றி 4 ஆயிரத்து 350 பேர் படுகாயம் அடைந்து உள்ளனர்.

ஆனாலும் சர்வதேச சமுதாயத்தின் வேண்டுகோளை ஏற்காமல் அதிபர் ஆதரவு படைகள் தொடர்ந்து தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றன. நேற்று முன்தினம் நடந்த தாக்குதல்களில் மட்டுமே 20 அப்பாவி மக்கள் பலியாகினர். அவர்களில் 4 பேர் ஏதுமறியாத அப்பாவி குழந்தைகள். படுகாயம் அடைந்தவர்களை சிகிச்சைக்காக எடுத்துச்செல்லவும் முடியாத அளவுக்கு சாலைகள் சிதைந்து போய் உள்ளன.

தற்போது கிழக்கு கூட்டாவின் முக்கிய நகரங்களான டூமா மற்றும் ஹராஸ்தா நகரங்களை கிளர்ச்சியாளர்கள் வசமுள்ள மற்ற பகுதிகளுடன் இணைக்கிற சாலைகளை அதிபர் படைகள் கைப்பற்றின. இதனால் கிழக்கு கூட்டா இப்போது டூமா, ஹரஸ்தா, எஞ்சிய நகரங்கள் என மூன்று துண்டுகளாகி விட்டன என்று சிரிய மனித உரிமைகள் கண்காணிப்பகம் கூறுகிறது.

குறிப்பாக டூமா நகரத்தை துண்டித்து விட்டது, கிளர்ச்சியாளர்களுக்கு விழுந்த பலத்த அடி என கருதப்படுகிறது.

தொடர்ந்து அதிபர் ஆதரவு படைகள் தொடர்ந்து முன்னேறி வருவது, கிளர்ச்சியாளர்களை பலவீனப்படுத்தி வருகிறது.

LEAVE A REPLY