சிம்பு படத்தில் இணைந்த மற்றொரு நடிகை

சுந்தர்.சி இயக்கத்தில் சிம்பு புதிய படமொன்றில் நடித்து வருகிறார். தெலுங்கில் வெளியாகி வெற்றி பெற்ற ‘அத்தாரின்டிகி தாரேதி’ என்ற படத்தின் ரீமேக்காக இந்தப் படம் உருவாகி வருகிறது. கடந்த வாரம் ஜார்ஜியாவில் தொடங்கிய இந்த படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடிக்கிறார்.

தற்போது மற்றொரு கதாநாயகியாக கேத்தரீன் தெரசா ஒப்பந்தமாகியுள்ளார். தெலுங்குப் பதிப்பில் பவண் கல்யாண், சமந்தா, ப்ரனிதா சுபாஷ் நடித்திருந்தனர். இதில் சமந்தா கதாபாத்திரத்தில் மேகா ஆகாஷும், பிரணிதாவின் கதாபாத்திரத்தில் கேத்தரீன் தெரசாவும் நடிக்க உள்ளனர்.

ஒரு வாரத்துக்கும் மேலாக நடைபெற்ற படப்பிடிப்பு நிறைவடைந்து. அடுத்த மாதம் ஐதராபாத்தில் தொடங்கும் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பில் கேத்தரீன் தெரசா இணைய உள்ளார். சிம்புவுடன் முதன்முறையாக இணைந்தாலும் கேத்தரீன், ஏற்கெனவே சுந்தர்.சி இயக்கத்தில் `கலகலப்பு 2′ படத்தில் நடித்துள்ளார். இது தவிர `நீயா 2′ படத்தில் ஜெய்யுடன் கேத்தரீன் தெரசா நடித்து வருகிறார்.