சிம்பு படத்தின் பத்து நாள் படப்பிடிப்பு

indexபீப் பாடல் விவகாரத்தில் சிக்கி சிம்பு தனது இமேஜை இழந்ததாக கூறப்பட்டாலும் அவருடைய படங்களுக்கு இதனால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது.
சிம்பு நடித்த ‘இது நம்ம ஆளு’ திரைப்படம் இதுவரை இல்லாத அளவில் மிகப்பெரிய தொகைக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி ரூ.30 கோடி பட்ஜெட்டில் மூன்று வேடத்தில் சிம்பு நடிக்கவுள்ள திரைப்படம் ஒன்றும் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகவுள்ளது.

இந்நிலையில் சிம்பு ரசிகர்கள் மகிழ்ச்சி அடையும் வகையில் இன்னொரு முக்கிய தகவல் வெளிவந்துள்ளது. கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் ‘அச்சம் என்பது மடமையடா’ திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் பத்து நாட்கள் மட்டுமே மீதமிருப்பதாகவும், அடுத்த மாத இறுதிக்குள் இந்த படத்தின் படப்பிடிப்பு முற்றிலும் முடிந்துவிடும் என்றும் படக்குழுவினர்களிடம் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளது.

சிம்பு, மஞ்சிமா மோகன் நடித்துள்ள ‘அச்சம் என்பது மடமையடா’ திரைப்படத்திற்கு ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். தமிழ், மற்றும் தெலுங்கு என இருமொழிகளில் உருவாகி வரும் இந்த படத்தின் தெலுங்கு பதிப்பில் நாக சைதன்யா நடித்து வருகிறார்.

LEAVE A REPLY