சிம்புவை வழிக்கு கொண்டு வந்த டிஆர்

zuckbates_610x406எப்போதாவது நடக்கிற அதிசயம் இது என்று கூட சொல்லமுடியாது. அதையும் தாண்டி… யெஸ். சிம்பு படப்பிடிப்புக்கு ஒழுங்காக வருகிறார் என்பதும், அவரது புதிய படமான ‘அன்பானவன் அடங்காதவன் அசராதவன்’ படப்பிடிப்பு 90 சதவீதம் முடிந்துவிட்டது என்பதும் எவ்வளவு பெரிய செய்தி!

ஒரு நான் கூட தவறாமல் அவர் ஷுட்டிங்குக்கு வந்ததாகவும், நேரம் காலம் பார்க்காமல் நடித்துக் கொடுத்ததாகவும் காதை கடிக்கிறது கோடம்பாக்கம். ஏன்? ஏன்? அப்பா டிஆரின் அளவுக்கதிகமான ஆத்திரம்தான் காரணமாம். “தம்பி… உனக்காக நான் ரொம்ப பணத்தை இறைச்சுட்டேன். பல கோடிகள் அவுட். இனிமேலும் இப்படியே இருந்தேன்னா என் மகன் சினிமாவிலிருந்து விலகிட்டார்னு நானே அறிக்கை விட்ருவேன். பார்த்துக்கோ” என்றாராம்.

அதையும் தாண்டி அவரால் கண்டிப்பு காட்ட முடியும் என்பதை அறிந்தவர்தானே சிம்பு? படக்கென்று தன் பழக்க வழக்கங்களை மாற்றிக் கொண்டாராம். வாங்க சிம்பு. காலமும் நேரமும் உங்களுக்காகவே காத்திருக்கு!

LEAVE A REPLY