சின்னம் குறித்து இறுதி தீர்மானம் – ஐ.தே.க.வின் விசேட செயற்குழு கூட்டம் இன்று

ஐக்கிய தேசியக் கட்சியின் விசேட செயற்குழு கூட்டம் இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறவுள்ளது.

கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோரின் தலைமையில் சிறிகொத்தாவில் இந்த கூட்டம் இடம்பெறவுள்ளது.

எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடவுள்ள சின்னம் குறித்து இன்றைய கலந்துரையாடலில் இறுதி தீர்மானம் எட்டப்படவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் விஜயபால ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

இதேவேளை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி தேசிய ஒற்றுமை கூட்டணி (ஜாதிக சமகி சந்தானய) தலைமையிலான அரசாங்கம் ஒன்றை அமைப்பதாக அந்த கூட்டணியின் பொதுச் செயலாளர் ரஞ்ஜித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.