சினிமாவிலும் போலீசாக நடிக்கிறார் தேவிப்ரியா

பெரிய திரையில் பெண் போலீஸ் என்றால் விஜயசாந்தி நினைவுக்கு வருவதைப்போல சின்னத்திரையில போலீஸ் என்றால் நினைவுக்கு வருகிறவர் தேவிப்ரியா. பெரும்பாலான தொடர்களில் அவர் போலீசாகத்தான் நடித்திருக்கிறார். ஆசைகள் தொடரில் போலீசாக நடித்தவர், தொடர்ந்து அதே மாதிரியான கேரக்டர்களில் நடித்தார். உயரமும், திடகாத்திரமான தோற்றமும் அவருக்கு போலீஸ் வேடங்களை பெற்றுக் கொடுத்தது. அச்சம் மடம் நாணம், சொர்க்கம், பாரதிராஜா இயக்கிய தெலுங்கு சீரியலான நாயுடம்மா, அத்திப்பூக்கள் ஆகிவயற்றில் தேவி பிரியா நடித்த போலீஸ் கேரக்டர்கள் மிகவும் பிரபலம்.

சினிமாவிலும் தேவிப்ரியாவுக்கு கிடைத்தது போலீஸ் கேரக்டர்தான். நாயகன், விஞ்ஞானி என இரண்டு படங்களில் போலீசாக நடித்தவர். தற்போது ஜெகன்நாத் இயக்கத்தில் தமிழ், ஆனந்தி நடிக்கும் என் ஆளோட செருப்ப காணோம் படத்திலும் போலீசாக நடித்து வருகிறார். மற்ற பட கேரக்டருக்கும், இந்த பட போலீஸ் கேரக்டருக்கும் வித்தியாசம் இருக்கிறது. இதில் அவர் காக்கி யூனிபார்ம் அணியாமல், ஜீன்ஸ், டீசர்ட் என்று மார்டன் போலீசாக வந்து கலக்குகிறாராம்.

LEAVE A REPLY