சித்திரவதைக்கு எதிரான ஐ.நா குழு சிறிலங்கா வருகிறது

சித்திரவதையைத் தடுப்பதற்கான ஐ.நா உபகுழு அடுத்தவாரம் சிறிலங்காவுக்கான முதலாவது பயணத்தை மேற்கொள்ளவுள்ளது.

ஏப்ரல் 2ஆம் நாள் தொடக்கம், 12 ஆம் நாள் வரை இந்தக் குழு சிறிலங்காவில் பயணத்தை மேற்கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறிலங்காவில் சித்திரவதைக்கு எதிரான மற்றும் மோசமான நடத்தைக்கு எதிரான பாதுகாப்பு குறித்து இந்தக் குழு ஆய்வுகளை மேற்கொள்ளவுள்ளது.

நான்கு பேர் கொண்ட ஐ.நா உபகுழு இந்தப் பயணத்தின் போது, அரசாங்க அதிகாரிகளுடனும், சம்பந்தப்பட்ட அமைச்சுக்கள் மற்றும் மனித உரிமைகள் ஆணைக்குழு, சிவில் சமூக அமைப்புகளுடனும் கலந்துரையாடவுள்ளது.

மோல்டோவா நாட்டைச் சேர்ந்த விக்டர் சகாரியா தலைமையிலான இந்தக் குழுவில், மொறிசியசை சேர்ந்த சத்யபூசண் குப்தா டோமா, சைப்ரசை சேர்ந்த பெட்ரோஸ் மைக்கலிடேஸ், பிலிப்பைன்சை சேர்ந்த ஜூன் லொபீஸ் ஆகியோரைக் கொண்ட குழுவே சிறிலங்கா வரவுள்ளது.