சித்தார்த் – ஆண்ட்ரியா இணையும் ‘அவள்’

சித்தார்த் மற்றும் ஆண்ட்ரியா இணைப்பில் உருவாகியுள்ள படத்திற்கு ‘அவள்’ என பெயரிட்டு இருக்கிறார்கள்.

‘ஜில் ஜங் ஜக்’ படத்தைத் தொடர்ந்து தனது அடுத்த படத்தை தயாரித்து நாயகனாக நடித்து வந்தார் சித்தார்த். அப்படம் பற்றிய எந்தவொரு தகவலுமே வெளியிடாமல் இருந்தார்.

தற்போது ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிந்து, இறுதிக்கட்டப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. இப்படத்துக்கு ‘அவள்’ என பெயரிட்டு இருக்கிறார்கள். ஆண்ட்ரியா, சுமன், அதுல் குல்கர்னி உள்ளிட்ட பலர் சித்தார்த்துடன் நடித்துள்ளார்கள்.

தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என 3 மொழிகளிலும் இப்படம் தயாராகியுள்ளது. ‘அவள்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீஸர் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. முழுக்க த்ரில்லர் பாணியில் இப்படத்தை மிலிண்ட் ராவ் இயக்கியுள்ளார்.

இறுதிக்கட்டப் பணிகள் முடிந்து, நவம்பரில் படம் வெளியிடப்படும் என்று படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது.

LEAVE A REPLY