சிதறும் எதிர்ப்பு வாக்குகளே அதிமுகவை ஆட்சிக் கட்டிலில் அமர்த்துகிறது: புதிய தலைமுறை

JAYA victoryஆளும் அதிமுகவுக்கு எதிராக வாக்களிப்போர் அதிகம் பேர் இருந்தாலும், அந்த வாக்குகள் சிதறுவதால், அதிமுக மீண்டும் ஆட்சி அமைக்கும் என புதிய தலைமுறை கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய தலைமுறை தொலைக்காட்சி நடத்திய கருத்துக் கணிப்பு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. அதன்படி, அதிமுக ஆதரவாக வாக்களிப்போம் என 42.69 சதவீதம் பேர் கூறியுள்ள நிலையில், அதிமுகவுக்கு வாக்களிக்க மாட்டோம் என 51.68 சதவீதம் பேர் கூறியுள்ளனர். அதிமுகவுக்கு எதிராக வாக்காளர்களின் மனநிலை அதிக அளவில் இருந்தாலும், அந்த வாக்குகள் பல்வேறு கட்சிகளுக்கு பிரிவதாலே அதிமுக மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் என கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.

வடக்கு மண்டலத்தில் அதிமுக கூட்டணிக்கு 36.23 சதவீத பேரும், திமுக கூட்டணிக்கு 30.08 சதவீத பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். மத்திய மண்டலத்தில் அதிமுக கூட்டணிக்கு 32.10 சதவீத பேரும், திமுக கூட்டணிக்கு 34.18 பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

மேற்கு மண்டலத்தில் அதிமுக கூட்டணிக்கு 42.09 சதவீதம் பேரும், திமுக கூட்டணிக்கு 27.04 சதவீதம் பேரும் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், தெற்கு மண்டலத்தில் அதிமுக கூட்டணிக்கு 39.85 சதவீதம் பேரும், திமுக கூட்டணிக்கு 31.60 சதவீதம் பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY