சிகப்பு நிறத்தால் வாய்ப்பு போச்சா? தமன்னா பதில்

i3.phpநடிகைகளில் தமன்னா, ஹன்சிகா போன்றவர்களின் சிவப்பு நிறம் பற்றி அடிக்கடி ரசிகர்கள் பேசுவதுண்டு. செம கலர் என்று பாராட்டப்பட்டாலும் கறுப்பு கலந்த மீடியமான நிறம் கொண்ட நட்சத்திரங்களுக்கே நடிக்க வேல்யூ உள்ள கேரக்டர்கள் அதிகம் கிடைக்கும்.

ஓவர் சிவப்பு நிறத்தால் நல்ல கேரக்டர்களை தவறவிட்டதுண்டா என்று தமன்னாவிடம் கேட்டபோது பதில் அளித்தார். ‘‘நிறத்தால் எனக்கு எந்த பாதிப்பும் இல்லை. எனக்கான படங்கள் எனக்கு கிடைத்தே விடுகின்றன.

நான் நடித்ததில் 2 படங்களில் எனது நிறத்தை குறைத்து மேக் அப் போட்டு நடித்தேன். அதில் ஒன்று பாகுபலி.

இப்படம் பாக்ஸ் ஆபிஸில் வசூல் சாதனை படைத்தது. அதனால் நிறம் ஒரு பிரச்னையே கிடையாது.

மற்ற எதையும்விட இந்தியர்களின் நிறம்தான் ரொம்ப அழகு. பெண்கள் எந்த நிறத்தில் இருக்கிறார்களோ அது அவர்களுக்கு அழகுதான்.

அதிலிருந்துதான் அழகு ஆரம்பமாகிறது என்பதையும் ஏற்றுக்கொள்ள வேண்டும்’’ என்றார்.

LEAVE A REPLY