சாவித்ரி கெட்டப்பில் கீர்த்தி சுரேஷ் நடிக்கும் போட்டோக்கள் லீக்!

மறைந்த நடிகையர் திலகம் சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு கதையில் உருவாகி வரும் படம் மகாநதி. நாக் அஸ்வின் இயக்கும் இந்த படத்தில் சாவித்ரி வேடத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்க, ஒரு நிருபர் வேடத்தில் சமந்தா நடிக்கிறார். மற்றபடி, மலையாள நடிகர் துல்கர் சல்மான் மற்றும் தெலுங்கு நடிகர் விஜய் தேவாரகொண்டா ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.

மேலும், இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில தினங்களுக்கு முன்பு ஐதராபாத்தில் தொடங்கியது. முதல்கட்ட படப்பிடிப்பில் கீர்த்தி சுரேஷ் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. இதில் சாவித்ரியின் இளமைக்கால கெட்டப்பில் தற்போது நடித்து வருகிறார் கீர்த்தி சுரேஷ். அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளை செக்யூரிட்டி போட்டு படமாக்கியபோதும், தற்போது சாவித்ரி கெட்டப்பில் கீர்த்தி சுரேஷ் தோன்றும் சில போட்டோக்கள் இணையதளங்களில் கசிந்துள்ளன. இதனால் அதிர்ச்சியடைந்த மகாநதி டீம், தற்போது பாதுகாப்பை அதிகப்படுத்தியுள்ளதாம்.

LEAVE A REPLY