சாய் பல்லவியுடன் மோதும் நிக்கி கல்ரானி

சாய் பல்லவி, நிக்கி கல்ரானி நடித்த படங்கள் ஒரே தேதியில் ரிலீஸாக இருக்கின்றன.
விஜய் இயக்கத்தில் சாய் பல்லவி நடித்துள்ள படம் ‘கரு’. ‘பிரேமம்’ மலையாளப் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான சாய் பல்லவிக்கு, இதுதான் முதல் தமிழ்ப் படம். சாம் சி.எஸ். இசையமைத்துள்ள இந்தப் படம், பிப்ரவரி 9ஆம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஜீவா – நிக்கி கல்ரானி நடித்துள்ள ‘கீ’ படமும் அதே தேதியில் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கலீஸ் இயக்கியுள்ள இந்தப் படத்தில், இன்னொரு ஹீரோயினாக அனைக்கா சோதி நடித்துள்ளார்.

சைக்கலாஜிக்கல் த்ரில்லராக இந்தப் படம் உருவாகியுள்ளது. படத்தைப் பார்த்த சென்சார் அதிகாரிகள், படத்துக்கு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளனர். 2 மணி நேரம், 22 நிமிடங்கள் ஓடும் வகையில் இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY