சவேந்திர சில்வாவிற்கு எதிரான யுத்தக் குற்ற ஆவணங்கள் வெளியாகின!

இலங்கையின் முப்படைகளின் பிரதானியான சவேந்திர சில்வாவிற்கு எதிரான யுத்தக் குற்றங்களை உள்ளடக்கிய ஆவணங்களை தென்னாபிரிக்காவை தளமாக கொண்ட சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான அமைப்பு வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக தென்னாபிரிக்காவை சேர்ந்த சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டத்திற்கான அமைப்பு சவேந்திர சில்வாவிற்கு எதிரான குற்றச்சாட்டுகள் ஆதாரங்களை உள்ளடக்கிய 137 பக்க ஆவணமொன்றையே இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்டுள்ளது.

குறித்த அறிக்கையில், யுத்தக்குற்றம் தொடர்பான புகைப்படங்கள், குறுஞ்செய்திகள் சாட்சியங்களின் வாக்குமூலங்கள் ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் இலங்கையின் முப்படைகளின் பிரதானியான சவேந்திர சில்வா பதவிநீக்கம் செய்யப்பட வேண்டுமென குறித்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.