சவேந்திரவுக்கு எதிராக எடுத்துள்ள முடிவை அமெரிக்கா மதிப்பாய்வு செய்யுமென நம்புகிறோம்- இலங்கை

இராணுவத் தளபதி சவேந்திர சில்வாவுக்கு எதிராக எடுத்துள்ள முடிவை அமெரிக்கா மதிப்பாய்வு செய்யுமென இலங்கை அரசாங்கம் நம்புவதாக அமெரிக்காவுக்கான இலங்கைத் தூதுவர் ரொட்னி பெரேரா தெரிவித்துள்ளார்.

வொஷிங்டன் நகரில் ​நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இராணுவத் தளபதி சவேந்திர சில்வா,அவரது குடும்பத்தினருக்கு அமெரிக்கா விதித்துள்ள தடையுத்தரவானது கவலையளிக்கும் செயலெனவும் ரொட்னி பெரேரா கூறியுள்ளார்.

மேலும் இந்த செயற்பாடு இயற்கை நீதி கொள்கைகளுக்கு முரணானது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.