சவுதி கூட்டுப்படைகளின் தவறான தாக்குதலில் ஏமன் அதிபர் ஆதரவு படையினர் 30 பேர் பலி

201510181932238622_30-of-Yemen-president-supported-force-killed-by-Saudi_SECVPF.gifஏமனில் ஈரான் ஆதரவு பெற்ற ஷியா பிரிவு ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும், அதிபர் மன்சூர் ஹாதி படையினருக்கும் இடையே நீண்ட காலமாக சண்டை நடந்து வந்தது.

இதில் ஹவுதி கிளர்ச்சியாளர்களின் கை ஓங்கியது. இதனால், அதிபருக்கு ஆதரவாக சவுதி அரேபியா தலைமையில், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், குவைத், பஹ்ரைன், கத்தார், ஜோர்டான், மொராக்கோ, எகிப்து, சூடான் ஆகிய 9 நாடுகளின் கூட்டுப்படைகள் களம் இறங்கின.இந்த கூட்டு படைகள் தொடர்ந்து வான் தாக்குதல்களை நடத்தி வருகின்றன.  இந்த நிலையில், தெற்கு ஏமனில் வாஜியா என்ற இடத்தில், அதிபர் ஆதரவு படையினரின் நிலை மீது சவுதி கூட்டுப்படைகள் நேற்று தவறுதலாக வான்தாக்குதல் நடத்தி விட்டன.

இந்த தாக்குதலில் அதிபர் ஆதரவு படையினர் 30 பேர் உயிரிழந்தனர். 40 பேர் காயம் அடைந்தனர்.

LEAVE A REPLY