சவுதியில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள பெண்ணை காக்க பேச்சுவார்த்தை!

mangala_sama-538சவுதி அரேபியாவில் இலங்கைப் பணிப் பெண் ஒருவருக்கு விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனையை தளர்த்துவது குறித்து, வௌிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, இலங்கையிலுள்ள சவுதி அரேபியத் தூதரக அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

நேற்று பாராளுமன்ற வாளாகத்தில் குறித்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக வௌிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

மேலும் இந்தக் கலந்துரையாடலில் அமைச்சர்களான தலதா அதுகோரல மற்றும் ஏ.எச்.எம்.பௌசி ஆகியோரும் கலந்து கொண்டனர்.

சவுதியில் தவறான உறவு வைத்திருந்ததாக குற்றம்சாட்டப்பட்ட இலங்கைப் பணிப் பெண் ஒருவரை கல்லால் அடித்துக் கொலை செய்யுமாறு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY