சவுதியில் பள்ளிவாசல் மீது தற்கொலை குண்டுத் தாக்குதல்

150525145823_arab_saudi_640x360_reutersசவுதி அரேபியாவில் ஒரு பள்ளிவாசல் மீது தாக்குதல் நடைபெற்றுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

நாட்டின் தெற்கேயுள்ள நர்ஜான் நகரில் தற்கொலை குண்டுத் தாக்குதல் ஒன்று இடம்பெற்றுள்ளதாகக் கூறும் அரச ஆதரவு தொலைக்காட்சியான அல் அரேபியா, அதில் குறைந்தது இரண்டு பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் கூறுகிறது.

இந்த ஆண்டு சவுதி அரேபியாவில் பல பள்ளிவாசல்கள் மீது தாக்குதல்கள் நடைபெற்றுள்ளன.

அதற்கு ஐ எஸ் அமைப்பு தாங்களே பொறுப்பு என்றும் கூறியுள்ளது.

அந்தத் தாக்குதல்கள் அனைத்தும், ஷியா சிறுபான்மை இனத்தவரை இலக்கு வைத்தே நடத்தப்பட்டன.

ஷியா முஸ்லிம்களின் ஒரு பிரிவான இஸ்மைலிகள் அதிகமாக இருக்கும் நர்ஜான் பகுதியிலுள்ள பள்ளிவாசல் ஒன்றின் மீதே இப்போது தாக்குதல் நடைபெற்றுள்ளது.

LEAVE A REPLY