‘சர்வம்’ படத்தை தொடர்ந்து ‘பரமபதம்’

‘சதுரங்கவேட்டை2, ‘கர்ஜனை’, ‘மோகினி’ மற்றும் மலையாளத்தில் ‘ரெடி ஜூட்’ ஆகிய படங்களில் த்ரிஷா நடித்து முடித்துள்ளார். பல மாதங்களாக வெளிவராமல் உள்ள இந்தப் படங்கள் விரைவில் அடுத்தடுத்து ரிலீசாகவிருக்கின்றன. இதற்கான ஏற்பாடுகளில் த்ரிஷாவே ஈடுபட்டிருக்கிறார்.

இந்நிலையில் இப்போது த்ரிஷா 96 என்ற படத்தில் நடித்து வருகிறார். விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு ஏறக்குறைய முடிவடையும்நிலையில் இருக்கிறது.

இந்த படத்தை அடுத்து அறிமுக இயக்குனர் திருஞானம் என்பவர் இயக்கி, தயாரிக்கும் ‘பரமபதம்’ என்ற படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார் த்ரிஷா.
இந்த படத்தில் த்ரிஷாவுக்கு டாக்டர் வேடம். ஏற்கெனவே விஷ்ணுவர்தன் இயக்கிய ‘சர்வம்’ படத்தில் டாக்டர் வேடத்தில் நடித்திருக்கிறார் த்ரிஷா.

சர்வம் படத்தை தொடர்ந்து ‘பரமபதம்’ படத்தில் மீண்டும் டாக்டர் வேடமேற்கிறார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மிக விரைவில் வெளியாகவிருக்கிறது. தொடர்ந்து இப்படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் 20-ஆம் தேதி துவங்கவிருக்கிறது.

LEAVE A REPLY