சர்வம் தாளமயம் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

‘மின்சார கனவு’, `கண்டுக்கொண்டேன் கண்டுக்கொண்டேன்’ வெற்றி படங்களை இயக்கிய ராஜீவ் மேனன் இயக்கத்தில் அடுத்ததாக உருவாகியிருக்கும் படம் `சர்வம் தாள மயம்’.

ஜி.வி.பிரகாஷ் நாயகனாக நடித்துள்ள இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடித்திருக்கிறார். நெடுமுடி வேணு, வினீத், திவ்யதர்ஷினி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

படப்பிடிப்பு முடிந்து படத்தின் பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடந்து முடிந்த நிலையில், தற்போது இதன் ரிலீஸ் தேதியை அறிவித்திருக்கிறார்கள். கிறிஸ்துமஸ் விடுமுறையை முன்னிட்டு டிசம்பர் 28ம் தேதி வெளியிட இருக்கிறார்கள்.

ஒரு மிருதங்க வித்வானிடமிருந்து கலையை கற்றுக்கொள்ள விரும்பும் ஒரு இளைஞன், பிற்படுத்தப்பட்ட குடும்பத்தை சார்ந்தவன் என்பதால் அவரிடமிருந்தும், கர்நாடக இசை சமூகத்திலிருந்தும் நிராகரிக்கப்படுகிறான். இன்றைய காலகட்டத்தில் சாதி, மத பிரச்சனைகளை தாண்டி அவனது இசை ஆசை நிறைவேறியதா என்பதே படத்தின் கதையாக உருவாக்கி இருக்கிறார்கள்