சர்ப்ரைஸ்.. கண்ணீர் விட்ட ரியோ

பிக் பாஸ் வீட்டில் உள்ள திரையில் தோன்றிய ரியோவின் மனைவி மற்றும் குழந்தையால் மகிழ்ச்சியில் திக்கு முக்காடினார் ரியோ .

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கடந்த வாரம் முழுவதும் தீபாவளி ஸ்பெஷல் டாஸ்க்குகல் வழங்கப்பட்டன. அதைத் தொடர்ந்து நேற்று புதிதாக மணிக்கூண்டு டாஸ்க் வழங்கப்பட்டது. மேலும் இந்த டாஸ்க் முடிவை வைத்தே போட்டியாளர்களுக்கு luxury பட்ஜெட்டிற்கான மதிப்பெண் வழங்கப்படும் என்று ஆகிவிட்டதால் போட்டியாளர்கள் இதில் அதிக கவனமுடன் செயல்பட்டனர்.

இந்நிலையில் மணிக்கூண்டு டாஸ்க் செய்து கொண்டிருந்த ரியோவிற்கு ஆச்சர்யம் அளிக்கும் வகையில் திரையில் தோன்றிய அவரது மனைவி ஸ்ருதி பிறந்தநாள் வாழ்த்து கூறியதை திரையில் பார்த்ததாக தெரிவித்தார். மேலும் வீட்டில் மகிழ்ச்சியாக இருக்கும்படியும் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்தபின் நாம் எல்லா பண்டிகைகளும் சிறப்பாக சேர்ந்து கொண்டாடுவோம் என்றும் தெரிவித்தார்.

மேலும் ஸ்ருதி, ரியோவிடம் பேசும் போது அவரது அழகான குழந்தை அருகிலேயே இருந்தார். இதனை சற்றும் எதிர்பாராத ரியோ அவர்கள் இருவரின் முகத்தைப் பார்த்ததும் ஆனந்தக் கண்ணீர் விட்டார். மற்ற போட்டியாளர்களும், ரியோவின் குழந்தையை பார்த்து அழகாக இருக்கிறாள் என்று தெரிவித்து அவரை கட்டி அணைத்தனர்.

பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் நாமினேட் ஆனவர்களில் ரியோவும் ஒருவர் என்றாலும் அவர் மக்களின் ஆதரவைப் பெற்று காப்பாற்றப்படுவார் என்றே கூறப்படுகிறது.