சம்பள உயர்வை வலியுறுத்தி கொழும்பில் ஆரம்பமானது பிரதான போராட்டம்

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளாந்த அடிப்படைச் சம்பளமாக 1000 ரூபாயை வழங்க வேண்டுமென வலியுறுத்தி கொழும்பில் பிரதான போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு – ஐந்துலாம்பு சந்தியில் இன்று (புதன்கிழமை) மாலை இந்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

‘ஒருமீ’ என்ற சிவில் சமூக அமைப்புக்களின் ஒன்றியமும், ஏனைய சிவில் அமைப்புக்களும் இணைந்து ஆயிரம் இயக்கம் எனும் பெயரில் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

இந்தப்போராட்டத்தில் பெருமளவிலான மக்கள் கலந்துகொண்டமையினால் குறித்த பகுதிகளில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

1000 ரூபாய் சம்பளத்தை வலியுறுத்தி இன்று நாடாளாவிய ரீதியில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.