சம்பந்தனின் பதவிக்கு ஆபத்தா?

தமிழ் தேசியக் கூட்டமைப்பிலிருந்து ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி மற்றும் டெலோ ஆகியன வெளியேறியுள்ள நிலையில், இலங்கைத் தமிழரசு கட்சி மற்றும் புளோட் அமைப்பு ஆகியனவே கூட்டமைப்பில் தற்போது அங்கம் வகிக்கின்றன. இவ்வாறு கூட்டமைப்பை விட்டு வெளியேறிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுயாதீனமாக இயங்க முன்வரும் பட்சத்தில், எதிர்க்கட்சித் தலைவர் பதவி கேள்விக்குறியாகி விடும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் பிரதீபா மஹனாமஹேவா தெரிவித்துள்ளார்.

மேலும், இலங்கை தமிழரசுக் கட்சியிலுள்ள சிலர் கட்சித் தாவும் பட்சத்திலும் எதிர்க்கட்சித் தலைவர் பதவி கேள்விக் குறியாகிவிடும் . இதன்படி, மக்கள் விடுதலை முன்னணி, கூட்டு எதிரணி ஆகியவற்றுக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி செல்வதற்கான வாய்ப்பு காணப்படும் . அவ்வாறு இல்லையெனில், ஐக்கிய தேசிய முன்னணியில் அங்கம் வகிக்கும் தமிழ் முற்போக்கு கூட்டணி, ஐக்கிய தேசிய முன்னணியிலிருந்து வெளியேறி நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் பட்சத்தில், தமிழ் முற்போக்கு கூட்டணிக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி செல்வதற்கான சந்தர்ப்பங்கள் காணப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY