சமூக ஊடக தகவல்களை நம்ப வேண்டாம் – சிறிலங்கா இராணுவத் தளபதி

சமூக ஊடகங்களில் வெளியாகின்ற தகவல்களை பொதுமக்கள் நம்ப வேண்டாம் என்று சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்க கேட்டுக் கொண்டுள்ளார்.

சிறிலங்காவின் தேசிய தொலைக்காட்சியான ரூபவாஹினியில் நேற்றிரவு உரையாற்றிய சிறிலங்கா இராணுவத் தளபதி, சமூக ஊடகங்களில் பதிவிடப்படும் பல்வேறு தகவல்களில் உண்மையில்லை என்றும், கூறினார்.

”இஸ்லாமிய அடிப்படைவாத வலையமைப்பின் உயர்மட்டத்தினர் குண்டுத் தாக்குதல்களில் இறந்து விட்டனர். இரண்டாம் மட்டத்தில் உள்ள தலைவர்களில் பெரும்பாலானோரும், 75 வீதமான சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த தாக்குதல்களுடன் தொடர்புடைய புற சக்திகடைய கண்டறிந்து அடையாளம் காணும் முயற்சிகள் நடந்து வருகின்றன.

இது சித்தாந்தத்துடன் தொடர்புடைய விடயம். நிலத்தைக் கேட்கின்ற தீவிரவாதம் அல்ல. அவர்கள் எதையும் கேட்கவில்லை.

எனவே சிறிலங்காவிலோ அல்லது வேறு எந்த இடத்திலோ ஒரு சமூகத்தில் இதனை கையாளுவது சுலபம் அல்ல.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.