சமூகவிரோதிகளை இரும்புகரம் கொண்டு அடக்க வேண்டும் ஜி.கே.வாசன் பேட்டி

201607110129245321_Antisocial-elements-iron-fistTo-suppress-theGK_SECVPF.gifதமிழகத்தில் சமூக விரோதிகளை இரும்புகரம் கொண்டு அடக்க வேண்டும் என்று ஜி.கே.வாசன் கூறினார்.

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் மதுரையில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தார். விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

இரும்புகரம்

தமிழகத்தில் தொடர்ந்து கொலை சம்பவங்கள் நடந்து வருவது கவலை அளிக்கிறது. சென்னையில் அ.தி.மு.க. கவுன்சிலர் கொலை செய்யப்பட்டு உள்ளார். இதுபோன்ற தொடர் கொலை சம்பவங்கள் மக்களிடத்தில் அச்சத்தையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.

காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். தனிப்படைகள் அமைத்து வன்முறையாளர்களை கண்காணித்து அவர்கள் கைது செய்யப்பட வேண்டும். பதற்றமான பகுதிகளில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படவேண்டும். சமூகவிரோதி என அடையாளம் கண்டு அவர்களை இரும்புகரம் கொண்டு அடக்க வேண்டும். அப்போது தான் மக்கள் மத்தியில் நம்பிக்கை ஏற்படும்.

போதை சாக்லெட்

தமிழகத்தில் போதை சாக்லெட் என்ற பேச்சுக்கே இடம் அளிக்கக்கூடாது. தமிழகம் முழுவதும் தீவிர சோதனை மற்றும் கண்காணிப்பு நடத்த வேண்டும். மாணவர்கள் இருக்கும் பகுதிகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும்.
போதை சாக்லெட் முற்றிலும் அழிக்கப்பட வேண்டும். இதை தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பவர்களுக்கு உச்சகட்ட தண்டனை வழங்க வேண்டும்.

இவ்வாறு ஜி.கே.வாசன் தெரிவித்தார்.

LEAVE A REPLY