சமன் ரத்னபிரியவை பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்க வர்த்தமானி அறிவித்தல் வௌியீடு

ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய பட்டியலில் தெரிவான பாராளுமன்ற உறுப்பினர் ஜயம்பதி விக்ரமரத்ன பதவி விலகியதை அடுத்து அப்பதவிக்கு சமன் ரத்னபிரியவை நியமிப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

ஜனவரி 20 ஆம் திகதி முதல் ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய பட்டியலில் தெரிவான பாராளுமன்ற உறுப்பினர் ஜயம்பதி விக்ரமரத்ன தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகியிருப்பதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் அறிவித்திருந்தார்.