சமசரத்தில் இறங்கிய சம்பந்தன்! செல்வம் அடைக்கலநாதனை கொழும்பில் சந்தித்தாராம் சுமந்திரன்!!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் எழுந்துள்ள நெருக்கடி நிலையினை அடுத்து நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் பங்காளிக் கட்சிகளின் முக்கியஸ்தர்களுடன் தொலைபேசி ஊடாக தொடர்புகொண்டு சமரச முயற்சியில் ஈடுபட்டதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

நேற்று முன்தினம் வேட்பாளர் பங்கீடு தொடர்பில் ஏற்பட்ட பிணக்கினை அடுத்து ரெலோ தமிழரசுக்கட்சியுடன் இணைந்து தேர்தலை சந்திப்பதில்லை என அறிவித்திருந்தது. அதேபோல புளொட் கட்சியும் கூட்டத்திலிருந்து வெளிநடப்புச் செய்திருந்தது.

இந்த நிலையில் இரண்டு கட்சிகளின் முக்கியஸ்தர்களுடன் இரா.சம்பந்தன் தொலைபேசி ஊடாக தொடர்புகொண்டு சமரச முயற்சியில் ஈடுபட்டதாக கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவித்திருக்கின்றன.

இதனிடையே கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன், ரெலோ கட்சித் தலைவர் செல்வம் அடைக்கலநாதனை கொழும்பில் நேற்று சந்தித்து கலந்துரையாடியதாகவும் சந்திப்பு வெற்றிகரமாக அமைந்ததாகவும் சுமந்திரன் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை கட்சிப் பிரமுகர்களிடம் கருத்துத் தெரிவித்த சம்பந்தன்,

பிரச்­சி­னைக்­கு­ரிய உள்­ளூ­ராட்சி மன்­றங்­கள் தொடர்­பா­கத் தமி­ழ­ர­சுக் கட்­சி­யு­டன் பேசு­வேன் என்றும், பங்­கா­ளிக் கட்­சி­க­ளு­டன் பேசும்­போது ஒன்­று­மைக்­காக எந்த விட்­டுக் கொடுப்­புக்­கும் தயார். அது தொடர்­பில் தமி­ழ­ர­சுக் கட்­சிக்கு அறிவுறுத்துவேன் என தெரிவித்ததாக தெரியவருகிறது.

LEAVE A REPLY