சபாநாயகர் தலைமையில் விசேட கட்சி தலைவர்கள் கூட்டம்

விஷேட கட்சி தலைவர்கள் கூட்டமொன்று இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 2 மணிக்கு இடம்பெறவுள்ளதாக கூறப்படுகின்றது.

சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் குறித்த கூட்டம், நடைபெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது ரஞ்சன் ராமநாயக்க ஒப்படைத்துள்ள தொலைபேசி உரையாடல்கள் உள்ளடங்கிய இருவெட்டை, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படுவது தொடர்பான தீர்மானமொன்று எடுக்கப்படுமெனவும் கூறப்படுகின்றது.

மேலும் அடுத்த நாடாளுமன்ற கூட்டத் தொடர் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது.