சபாநாயகரை சந்தித்தார் ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர்!

ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான தூதுவர் டெனிஸ் சைபி சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவை அண்மையில் சந்தித்து கலந்துரையாடினார்.

நாடாளுமன்றத்தில் நடைபெற்ற இச்சந்திப்பில் அரசியல் தூதுவருடன் வர்த்தகம் மற்றும் தொடர்பாடல் துறைக்கான பிரதித் தலைவர் அன்னே வாகியர் சட்டர்ஜியும் கலந்துகொண்டிருந்தார்.

இலங்கையின் சமகால நடவடிக்கைகள் தொடர்பாக இடம் பெற்ற கலந்துரையாடலில்,நாடாளுமன்றத்தின் செயலாளர் நாயகம் தம்மிக்க தஸநாயக்கவும் இணைந்துகொண்டிருந்தார்.