சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை!

சபாநாயகர் கரு ஜயசூரியவிற்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் ஒன்றை கொண்டு வருவதற்கு கூட்டு எதிர்க்கட்சி திட்டமிட்டுள்ளது. சபாநாயகரின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பை வெளியிட்டு இவ்வாறு நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அண்மையில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையில் மோதல் சம்பவம் இடம்பெற்றமைக்கு சபாநாயகரின் தவறே காரணம் எனவும், இதற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க பொறுப்பு சொல்ல வேண்டும் எனவும் கூட்டு எதிர்க்கட்சியினர் தெரிவிக்கின்றனர்.

ஏற்கனவே பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இணங்கப்படும் சில விடயங்கள் தொடர்பில் சபாநாயகர் ஆசனத்திற்கு வந்ததன் பின்னர் வேறு விதமாக நடந்து கொள்வதாக கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

நாடாளுமன்றில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு சாதகமான வகையில் சபாநாயகர் நடந்து கொள்கின்றார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சபாநாயகர் நாடாளுமன்றை இழிவுபடுத்தும் வகையிலான செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

கூட்டு எதிர்க்கட்சி, ஜே.வி.பி மற்றும் ஆளும் கட்சியில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகியனவற்றின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபாநாயகர் கரு ஜயசூரிய மீது அதிருப்தி கொண்டுள்ளதாக குறித்த பெயர் குறிப்பிட விரும்பாத கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY