சனியின் துணைக்கோளை நெருங்கிச் செல்லும் நாசா விண்ணோடம்

151028110242_enceladus_cassini_624x351_nasa_nocreditநாசாவினால் சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன்னர் ஏவப்பட்ட விண்ணோடம் ஒன்று, சனிக்கிரகத்தின் துணைக்கோள்களில் ஒன்றான இன்செலடஸினின் சிறந்த காட்சியை படமெடுக்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புதன் இரவு, காசினி என்று அழைக்கப்படும் இந்த விண்ணோடம், சனிக்கிரகத்தின் துணைக்கோள்களில் ஒன்றான இன்செலடஸினின் தென் துருவத்திலிருந்து பெருமளவு நிராவி வெளிப்படும் இடத்தை ஊடறுத்துச் செல்லவிருக்கிறது. அப்போது ஐம்பது கிலோ மீட்டர் தூரத்தில் இன்செலடஸின் மேற்பரப்பை இந்த விண்ணோடம் காணமுடியும், படமெடுக்க முடியும்.

உறைநிலையில் இருக்கும் இன்செலடஸின் கோளின் மேற்பரப்புக்கு அடியில் திரவக் கடல் ஒன்று இருப்பதாக நம்பப்படுகிறது.

சூரிய குடும்பத்திற்குள் உயிர்கள் தோன்றி வாழ்வதற்கு ஏதுவான இடங்களில் ஒன்றாக இன்செலடஸ் கோள் கருதப்படுகிறது.

LEAVE A REPLY