சந்திரிகா பண்டாரநாயக்க தற்போது செல்லாக் காசு

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த எவரும் தொடர்ந்தும் அரசாங்கத்தோடு இணைய மாட்டர்கள் என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்துள்ளார்.

அநுராதபுரத்தில் இன்று (21) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை தற்போது பூர்த்தியாகியுள்ள நிலையில், எதிர்க் கட்சிகளைச் சேர்ந்த எந்தவொரு பாராளுமன்ற உறுப்பினரும் இனி, அரசாங்கத்தோடு இணைய மாட்டார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் அமைச்சுப் பதவியொன்று கிடைக்காமல், எவரும் அரசாங்கத்தோடு இணையத் தயாராக இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தற்போது செல்லாக் காசாகியுள்ளதாகவும் அதனால் அவரை ஐக்கிய தேசியக் கட்சியினர் ஒருபோதும் இணைத்துக்கொள்ள மாட்டார்கள் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.