சந்திரகுமாரின் ஆதரவாளர் மீது சிறீதரன் தரப்பு தாக்குதல்!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரகுமாரின் அலுவலக பணியாளர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நேற்று செவ்வாய்க்கிழமை மாலை மேற்கொள்ளப்பட்ட இத் தாக்குதலில் பாதிக்கப்பட்ட மோகன் தினேஸ் என்பவர் காயமடைந்த கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிசை பெற்று வருகின்றார்.

நேற்று செவ்வாய் கிழமை மாலை கிளிநொச்சி நகரிலிருந்து திருநகரில் அமைந்துள்ள அவரது வீட்டுக்கு உந்துருளியில் சென்றிருக்கொண்டிருந்த போது திருநகர் சுடலை வீதியில் தமிழரசுக்கட்சி ஒன்றின் கரைச்சி பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் தலைமையிலான குழுவினர் குறித்த நபரை சுடலை வீதிப் பகுதியில் அழைத்துச் சென்று கடுமையாக தாக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.

தாக்குதலுக்குள்ளான நபர் உடனடியாக கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.