சஜித் பதவி துறக்க வேண்டும்

தேர்தல் காலப்பகுதியில் தமது அமைச்சுப் பதவியில் இருந்து விலக சஜித் பிரேமதாச நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்தார்.

அதேபோல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஜனாதிபதி தேர்தல் காலப்பகுதியில் சுயாதீனமாக செயற்பட தீர்மானித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா மேலும் தெரிவித்தார்.