சஜித் நல்லவர் ஆனால் பொறுமையில்லை: அஜந்த பெரேரா கவலை!

கட்சியின் உண்மை கொள்கை திட்டத்தை அறிந்தவர்கள் கட்சியை விட்டு விலகவில்லை. கட்சியில் வாடகைக்கு இருந்தவர்களே சென்றுள்ளனர் என ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட வேட்பாளர் கலாநிதி அஜந்த பெரேரா தெரிவித்துள்ளார்.

பாட்டலி சம்பிக்க ரணவக்க வாடகைக்கு இருந்தவர். அவர் ஹெல உறுமயவைச் சேர்ந்தவர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தென்னிலங்கை ஊடகமொன்றிற்கு வழங்கிய செவ்வியின் போதே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.

தொடர்ந்தும் அவர் அந்த செவ்வியில் தெரிவிக்கையில்,

சஜித் பிரேமதாஸ நல்லவர். அவருக்கு பொறுமையில்லை. அவர் ஐ.தே.க.வில் இருந்திருந்தால் 2025இல் அவரே ஜனாதிபதியாக வந்திருப்பார். அந்த சந்தர்ப்பத்தை அவர் இல்லாமல் செய்துவிட்டார் என

ஐக்கிய தேசிய கட்சி தற்போது பிளவுபட்டல்லவா இருக்கின்றது. இந்நிலையில் உங்களுக்கு வெற்றி பெறும் நம்பிக்கை இருக்கின்றதா? என அவரிடம் வினவப்பட்ட போது

கட்சியின் உண்மை கொள்கை திட்டத்தை அறிந்தவர்கள் கட்சியை விட்டு விலகவில்லை. கட்சியை பற்றி தெரியாதவர்களும் கட்சியை சாராதவர்களுமே கட்சியை விட்டுச் சென்றுள்ளனர். கட்சியில் வாடகைக்கு இருந்தவர்களே சென்றுள்ளனர். பாட்டலி சம்பிக்க ரணவக்க வாடகைக்கு இருந்தவர். அவர் ஹெல உறுமயவைச் சேர்ந்தவர். சஜித் பிரேமதாஸ நல்லவர். அவருக்கு பொறுமையில்லை.

அவர் ஐ.தே.க.வில் இருந்திருந்தால் 2025இல் அவரே ஜனாதிபதியாக வந்திருப்பார். அந்த சந்தர்ப்பத்தை அவர் இல்லாமல் செய்துவிட்டார். அவர் மக்களுக்கு வேலை செய்து கட்சியை சிறப்பாக வழிநடத்தியிருந்தால் முன்னோக்கி வந்திருக்கமுடியும். சம்பிக்க, பதியுதீன் போன்றோரே புதிய கட்சி ஆரம்பிப்பது தொடர்பில் உசுப்பேற்றியிருக்கின்றனர்.

பிளவுபட்டதால் ஐ.தே.க. தோல்லியடையமென நம்பவில்லை. கொழும்பு மாவட்டத்தில் சஜித்தை விட ரணில் விக்ரமசிங்கவுக்கு அதிக ஆதரவு இருக்கின்றது. அதனால் எங்களின் வெற்றிக்கு பெரிய பாதிப்பு ஏற்படாது என அவர் பதிலளித்திருந்தார்.