சஜித் தலைமையிலான கட்சியின் தலைமைக் காரியாலயம் திறப்பு

சஜித் பிரேமதாச தலைமையிலான சமகி ஜன பலவேகய கட்சியின் தலைமையகம் எதுல் கோட்டே, ஈ.டபிள்யு.பெரேரே மாவத்தையில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

அக்கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாசவினால் குறித்த காரியாலயம் இன்று (திங்கட்கிழமை) திறந்துவைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து சர்வமத பிரார்த்தனைகள் இடம்பெற்றன.

சஜித் பிரேமதாச தலைமையில் பொதுத் தேர்தலை முன்னிட்டு உருவாக்கப்பட்ட சமகி ஜன பலவேகய என அழைக்கப்படும் ஐக்கிய மக்கள் சக்தி கடந்த மார்ச் மாதம் 2ஆம் திகதி அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.