சஜித் எடுக்கும் முடிவுக்கு முழு சம்மதம் – தமிழ் கட்சிகள் அறிவிப்பு

தேசிய பட்டியல் ஆசனம் தொடர்பில் சஜித் பிரேமதாச எடுக்கும் எந்தவொரு முடிவையும் தாம் ஏற்றுக்கொள்வதாக தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவிலாளர்கள் சந்திப்பிலேயே இதை குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவிக்கையில்,

வாயில் துப்பாக்கியை வைத்து தாம் விரும்புவதை பெற்றுக்கொள்வது தமிழ் கட்சிகளின் விருப்பம் அல்ல.

தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினரின் பொறுப்பு சஜித் பிரேமதாசவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியுடன் எதிர்காலத்தில் எதிர்க்கட்சியின் பாத்திரத்தில் இருக்க உறுதிபூண்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

குறித்த பத்திரிகையாளர் சந்திப்பில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் அனைத்து தமிழ் கட்சிகளும் கலந்து கொண்டு தமது ஆதரவை வழங்கியிருந்தார்கள்.

இதேவேளை அண்மைக் காலங்களில் தமிழ் கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒருவருக்கு தேசியப்பட்டியல் கிடைக்க வேண்டும் எனவும், அவ்வாறு கிடைக்காவிட்டால் நாடாளுமன்றத்தில் தன்னிச்சையாக செயற்பட உள்ளதாகவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.