சஜித்தை பிரதமராக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும்

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை பிரதமர் நாற்காலிக்கு கொண்டு வருவதற்காக அனைத்து சக்திகளும் இணைந்து ஒரு விரிவான கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணாயக்கார தெரிவித்தார்.

காலி, யக்கலமுல்ல பிரதேசத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் கிராம அளவிலான பிரதிநிதிகளுக்கான சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

” நாம் உருவாக்கும் கூட்டணியை சீர்குலைப்பதற்காக எவரேனும் முயற்சி செய்வார்களாயின், அவர்களின் தேவையாக அமைவது ராஜபக்ஷக்களுக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுக் கொடுப்பதாகும். ராஜபக்ஷக்களை தோற்கடிப்பதற்காகவே நாம் அனைவரும் இணைந்து கூட்டணி ஒன்றை உருவாக்கயுள்ளோம். எவரேனும் ஒருவர் இந்த கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவிப்பாளர்களாயின் அவர்கள் மீண்டும் ஒருமுறை ராஜபக்ஷக்களுக்கு அதிகாரத்தை பெற்றுக் கொடுக்க முயற்சிப்பவர்களாகும். என்றார்.