சஜித்தை நோக்கி கல்வீச்சு தாக்குதல்!- இரத்மலானையில் சம்பவம்

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கலந்துகொண்ட கூட்டமொன்றில் கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு இரத்மலானையில் இடம்பெற்ற கூட்டமொன்றில், சஜித் பிரேமதாச உரையாற்றிக்கொண்டிருக்கும்போது அவரை நோக்கி இனந்தொரியாத சிலர் கற்களை வீசியுள்ளனர்.

இதன்போது சஜித், இந்த கல்வீச்சு தாக்குதலுக்கு எல்லாம் தான் ஒருபோதும் பயப்படமாட்டேன் என குறிப்பிட்டுள்ளார்.

மேலும், எந்ததொரு சவாலையும் எந்நேரத்திலும் எதிர்க்கொள்ள தயாராக இருக்கின்றேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், சஜித் பிரேமதாசவுக்கு உடனடியாக மேலும் பாதுகாப்பை அதிகாரிகள் அதிகரித்தமையை, குறித்த கூட்டத்தில் அவதானிக்க கூடியதாக இருந்தது.