சஜித்தின் வடக்கு விஜயம் இரத்து!

அமைச்சர் சஜித் பிரேமதாச வடக்கிற்கு மேற்கொள்ளவிருந்த விஜயம் இரத்து செய்யப்பட்டுள்ளதாக அமைச்சினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் சஜித் பிரேமதாச எதிர்வரும் திங்கட்கிழமை வடக்கிற்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

அமைச்சரின் விஜயத்தை முன்னிட்டு சாவகச்சேரி, கிளிநொச்சி மற்றும் மன்னார் தேசிய பாடசாலைகளுக்கு வீடமைப்பு மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் நிதியொதுக்கீட்டின் கீழ் மூன்று பேருந்துகள் வழங்கும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக அமைச்சர் சஜித் பிரேமதாச கலந்துகொண்டு பேருந்துகளை பாடசாலை நிர்வாகத்திடம் கையளிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

இந்நிலையில், இந்த பயணம் இரத்து செய்யப்படுவதாகவும் குறித்த நிகழ்வு பிற்போடப்பட்டுள்ளதாகவும் இன்று அதிகாலை குறித்த அமைச்சினால் அறிவிக்கப்பட்டுள்ளது.