சஜித்தின் பதவியை கைப்பற்ற கடும் போட்டி!

ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் பதவியில் இருந்து சஜித் பிரேமதாச நீக்கப்பட்டதை அடுத்து அதன் வெற்றிடத்தைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கட்சியின் உப தலைவர் ரவி கருணாநாயக்க மற்றும் சிரேஷ்ட உப தவிசாளர் தயா கமகே ஆகியோருக்கு இடையிலேயே இந்த போட்டி ஏற்பட்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் பதவியை தயா கமகேவுக்கு வழங்க கட்சியின் தலைவரான ரணில் விக்ரமசிங்க விரும்புவதாகவும் அந்த பதவியை கைப்பற்ற ரவி கருணாநாயக்க கடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார் எனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் உட்தரப்புத் தகவல்கள் கூறுகின்றன.

கடந்த பொதுத் தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிட்ட தயா கமகே இம்முறை கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடுகிறார்.

ரணில் விக்ரமசிங்கவின் ஆலோசனைக்கு அமையவே அவர் கொழும்பில் போட்டியிடுவதுடன் அவருக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் ஹோமாகமை தொகுதி அமைப்பாளர் பதவியும் வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கட்சியின் பிரதித் தலைவர் பதவியை கைப்பற்றும் போட்டியை ரவி கருணாநாயக்க கைவிடாது தொடர்ந்து வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தகவல்கள் தெரிவிக்கின்றன.