சஜித்தின் காய்நகர்த்தல்!

எதிர்வரும் பொதுத்தேர்தலில் வெற்றிபெறுவதற்கான வியூகங்களை வகுக்க எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் புதிய முன்னணி ஒன்றை உருவாக்கப்படவுள்ளது.

இந்த தகவலை பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அரவிந்தகுமார் தெரிவித்துள்ளார்.

வெலிமடை ஊவா பரணகம பகுதியில் அமைக்கப்பட்ட புதிய வீதி கட்டமைப்பை மக்கள் பாவனைக்கு கையளிக்கும் நிகழ்வில் உரையாற்றிய போதே அரவிந்தகுமார் இதனை கூறினார்.அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்

கடந்த ஜனாதிபதி தேர்தலில் பின்னடைவை சந்தித்த போதிலும் எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணி நிச்சயம் வெற்றி பெறும்.

அதனை இலக்காகக் கொண்டு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் புதிய தேர்தல் வியூகங்கள் வகுக்கப்பட்டுள்ளன.

எனவே கடந்த ஜனாதிபதி தேர்தலில் மலையக மக்கள் செயற்பட்ட விதத்திற்கு நிகராக எதிர்வரும் பொதுத் தேர்தலிலும் செயற்பட்டால் நிச்சயம் நாடாளுமன்ற ஆட்சியை கைப்பற்றுவது உறுதி எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.