சசிகுமார் கொலைக்கு கண்டனம்… சென்னையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழிசை, ஹெச்.ராஜா கைது

i3-phpகோவையில் இந்து முன் னணி பிரமுகர் சசிக்குமார் கடந்த சில நாட்களுக்கு முன்பு படுகொலை செய்யப்பட்டார். இதனை கண்டித்து தமிழகம் முழுவதும் பாஜக சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன்படி, சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஆனால், அனுமதி இல்லாத இடத்தில் ஆர்ப்பாட்டம் நடத்துவதாகக் கூறி தமிழிசை, ஹெச்.ராஜா உட்பட 200 பேரைப் போலீசார் கைது செய்தனர்.

LEAVE A REPLY