சசிகலாவை சந்தித்த சுப்பிரமணியன்

தனது கணவர் நடராஜன் உடல் நிலை சரியில்லாததை காரணம் காட்டி சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் சசிகலா 5 நாட்கள் அவசர பரோலில் வந்துள்ளார். தி நகர் கிருஷ்ண பிரியாவின் வீட்டில் இருக்கும் சசிகலா தினமும் குளோபல் மருத்துவமனையில் உள்ள அவரது கணவரை பார்த்து வருகிறார்.

பரோலில் வந்துள்ள சசிகலாவுக்கு வீட்டை தவிர கணவர் நடராஜன் அனுமதிக்கப்பட்டுள்ள குளோபல் மருத்துவமனைக்கு செல்ல மட்டுமே அனுமதியுள்ளது.

இதனால் மருத்துவமனைக்கு வரும் சசிகலாவை பார்க்க கூட்டம் அலை மோதுகிறது. நேற்று குளோபல் மருத்துவமனைக்கு வந்த சசிகலாவை சுப்பிரமணியன் என்ற முதியவர் அவரது காருக்கு மிக நெருக்கமாக சென்று சசிகலாவிடம் பேசினார். அப்போது பேசிய அவர் நீங்க முதல்வர் ஆயிடுவீங்க என கூறியுள்ளார்.

அதற்கு சசிகலாவும் புன்னகைத்தவாறு பிரேயர் பண்ணுங்க என கூறியுள்ளார். வங்கி ஊழியராக பணிபுரிந்து ஓய்வு பெற்றுள்ள சுப்பிரமணியன் சென்னை ராயப்பேட்டை வி. எம். தெருவில் வசித்து வருகிறார்.

இவர் 1981-இல் நடராஜன், சசிகலா தம்பதியினருக்கு ஆயிரம் ரூபாய் அட்வான்ஸில் 400 ரூபாய் வாடகையில் வீடு வாடகைக்கு கொடுத்திருக்கிறார்.

மேலும் சசிகலா கேசட் கடை நடத்துவதற்கு வங்கி கடன் கிடைக்க இவர் உதவியதாகவும் கூறப்படுகிறது.

LEAVE A REPLY