சசிகலாவுக்கு சிறையில் சலுகை வழங்கப்படுவதாக புகார் கூறிய டிஜஜி ரூபா பணியிடமாற்றம்

சசிகலாவுக்கு சிறையில் சலுகைகள் வழங்கப்படுவதாக கூறிய கர்நாடக சிறைத் துறை டிஜஜி ரூபா பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

பெங்களூரு சிறையில் அதிமுக (அம்மா) பொதுச்செயலாளர் சசிகலாவுக்கு விவிஐபி வசதிகள் செய்யப்பட்டு இருந்ததாகவும், அதற்கான ஆதாரங்கள் அழிக்கப் பட்டு இருப்பதாகவும் கர்நாடக சிறைத்துறை டிஐஜி ரூபா டி.மவுட்கில் குற்றம்சாட்டினார்.

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்ட சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் கடந்த பிப்ரவரி 15-ம் தேதி பெங்களூருவில் உள்ள‌ பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் சசிகலா தரப்பிடம் ரூ.2 கோடி லஞ்சம் பெற்றுக்கொண்டு, சிறைத் துறை டிஜிபி சத்தியநாராயண ராவ் உள்ளிட்ட அதிகாரிகள் அவருக்கு சிறப்புச் சலுகை காட்டி வருவதாக டிஐஜி ரூபா டி. மவுட்கில் கடந்த புதன்கிழமை அறிக்கை தாக்கல் செய்தார்.

இது தொடர்பாக விசாரிக்க ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி வினய்குமார் தலைமையில் உயர்மட்ட விசாரணைக்குழுவை அமைத்து கர்நாடக முதல்வர் சித்தராமையா உத்தரவிட்டார்.

அடுத்த ஒரு வாரத்தில் இடைக் கால அறிக்கையும், ஒரு மாதத்தில் விரிவான அறிக்கை யும் தாக்கல் செய்ய வேண்டும் என இக்குழுவுக்கு உத்தரவிடப்பட்டது.

இந்த நிலையில் சலுகைகள் குறித்து உயர்மட்ட குழு விசாரணை தொடங்கியிருந்த நிலையில் ரூபா பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

கர்நாடக அரசின் உத்தரவையும் மீறி ஊடகங்களுக்கு பேட்டி அளித்ததால் ரூபா இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

மேலும் லஞ்சம் பெற்றதாக கூறப்படும் சத்தியநாராயண ராவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

LEAVE A REPLY