சசிகலாவுக்கு இலங்கை எம்.பி. கடிதம்

இலங்கை எம்.பி. ஆறுமுகன் தொண்டைமான், மறைந்த முன்னாள் முதல்–அமைச்சர் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவுக்கு கடிதம் ஒன்று அனுப்பியுள்ளார்.

அதில் கூறப்பட்டுள்ளதாவது:–

கச்சத்தீவில் புதிதாக கட்டப்பட்டுள்ள புனித அந்தோணியார் தேவாலய திறப்பு விழாவில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படும் தமிழக மீனவர்களின் எண்ணிக்கை 20–ல் இருந்து 100 ஆக உயர்த்தப்படுகிறது. நான் எங்கள் நாட்டின் (இலங்கை) அதிபர் மைத்திரிபாலா சிறிசேனாவிடம் உங்களது கோரிக்கை எடுத்துக் கூறினேன். அவரும் உடனடியாக அனுமதி வழங்கினார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY