சக்திவாய்ந்த நாடொன்றின் தூதுவராகிறார் ஆசாத்சாலி?

மேல் மாகாண ஆளுநர் பதவியிலிருந்து அண்மையில் பதவி விலகிய ஆசாத் சாலி சக்திவாய்ந்த நாடொன்றின் தூதுவராக நியமிக்கப்படவுள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உயிர்த்தஞாயிறு தாக்குதல்களை நடத்திய தற்கொலைதாரிகளுடன் தொடர்பெனத் தெரிவித்து கிழக்கு மாகாண ஆளுநரான இருந்த ஹிஸ்புல்லாஹ் ,மேல் மாகாண ஆளுநரான ஆசாத்சாலி மற்றும் அமைச்சர் ரிசாட் பதியுதீன் ஆகியோரை பதவிவிலகக்கோரி கண்டி தலதா மாளிகைக்கு முன்பாக நாடாளுமன்ற உறுப்பினர் அதுரலிய ரத்ன தேரர் தொடர் உண்ணவிரதப் போராட்டத்தை மேற்கொண்ட நிலையில் மேற்கண்ட மூவரும் பதவி விலகியிருந்தனர்.

இந்த நிலையில் இந்த சம்பவத்துடன் ஆசாத் சாலி தவறாக தொடர்பு படுத்தப்பட்டுள்ளதால் அவரை மேற்படி தூதுவர் பதவிக்கு நியமிக்க ஜனாதிபதி முடிவெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.