க.பொ.த உயர்தர மற்றும் புலமைப் பரிசில் பரீட்சைகளை ஒத்திவைக்க அரசு தீர்மானம் – கல்வி அமைச்சின் செயலர்

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை, 5 ஆம் தர புலமைப் பரிசில் பரீட்சைகளை ஒத்திவைக்க அரசு தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் அனுஷா கொனுகுல தெரிவித்துள்ளார்.

கம்பஹா மாவட்டத்தில் கொரோனா வைரஸ் ஏற்பட்டதன் விளைவாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் ஏற்பட்டதனால் நாட்டின் அனைத்து பாடசாலைகளும் மூடப்பட்டுள்ளது என்றும், கொழும்பு மாவட்டத்தில் பகுதி நேர வகுப்புகளுக்குத் தடை விதிக் கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு நேற்று தெரிவித்தது.

பரீட்சைகளுக்கான திகதிகள் இன்று இடம்பெறவுள்ள கலந்துரையாடலின் போது தீர்மானிக்கப்படும் எனவும் மேலும் தெரிவித்துள்ளார்.