கோத்தாவை இலகுவில் தோற்கடிக்கலாம்! – ராஜித சேனாரத்ன

2020 ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச போட்டியிட்டால், அவரை இலகுவாக தோற்கடிக்க முடியும் என அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். “ கோத்தபாய ராஜபக்ச போட்டியிட்டால், அவரே தோற்கடிக்க கூடிய வேட்பாளராக இருப்பார். கோத்தபாய ராஜபக்சவுக்கு சிறுபான்மையினர் எவரும் வாக்களிக்க மாட்டார்கள். சிங்கள வாக்குகள் மாத்திரமே அவருக்கு கிடைக்கும். இதனால், அவரை இலகுவாக தோற்கடிக்க முடியும்” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்

LEAVE A REPLY